ஜெர்மனியில் ஸ்ரீ கணேசன் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெர்லின் நகரில் உள்ள புகழ்பெற்ற ஹேசன்ஹெய்ட் பூங்கா அருகில், புதிய ஸ்ரீ கணேசர் கோயில் கட்டப்பட்டது. கோயில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் 17 மீட்டர் உயரமான கோபுரம் திகழ்கிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்கள் மற்றும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கோயில் கோபுரம், தொலைவில் இருந்தும் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் பாரம்பரிய கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. ஐரோப்பிய மண்ணில் இந்து கலாச்சாரத்தின் அடையாளமாகவும், ஆன்மிக மையமாகவும் ஸ்ரீ கணேசன் ஆலயம் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version