புதிதாகத் தொடங்கப்பட்ட E20 மக்கள் கட்சியின் (E20 Janata Party)  இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, எத்தனால் கலப்பில்லாத எரிபொருளை வலியுறுத்தி இ20 மக்கள் கட்சி (E20 Janata Party) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிலையங்களில் மக்களுக்கு E20 (20% எத்தனால்) கலக்கப்படாத பெட்ரோல் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை இவர்கள் பிரதானமாக வலியுறுத்துகின்றனர். மேலும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலகக் கோரியும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தொடங்கப்பட்ட இக்கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version