கொடைரோடு அருகே ஊத்துப்பட்டியில் அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன் மற்றும் கருப்பணசாமி கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்……

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஜம்புத்துரைக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன், கருப்பணசாமி மற்றும் செல்வ விநாயகர் கோவில் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

நேற்று தொடங்கிய விழாவில் இரவு மேளதாளம் தாரை வாணவேடிக்கைகள் முழங்க அம்மன் பூங்கரகம் ஊர்வலமாக அழைத்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாலம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது,

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆணிக்கால் செருப்பு அணிந்து சாமியாடி வந்த பூசாரி சரவணன் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்,

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சென்னை,மதுரை,கோவை, திண்டுக்கல்,பெங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்,விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதான வழங்கப்பட்டது,விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version