சிறந்த இயற்கை விவசாயம் ஆராய்ச்சி மாணவருக்கு நம்மாழ்வார் பெயரில் விருது தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மறைந்த டாக்டர் நம்மாழ்வார் அவர்களின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் இந்த விருது அளிக்கப்பட உள்ளது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வளாகத்தில் ஆண்டுதோறும், இயற்கை விவசாயத்தில் சிறந்த ஆய்வு செய்து தேர்வாகும் மாணவருக்குப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும்.

விருதுடன் ₹50,000/- ரொக்கப்பரிசும், தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

நம்மாழ்வாரின் பணியையும், இயற்கை விவசாயத்தின் மேன்மையையும் இன்றைய விழாவில் நினைவு கூர்ந்த ஆளுநர் நம்மாழ்வாரை பெருமைப்படுத்தும் வண்ணம் இவ்விருதை அறிவித்துள்ளார்.

நம்மாழ்வார் முதுநிலை ஆய்வு விருது – இயற்கை விவசாயம் என்கிற புதிய விருதை ஆளுநர் அறிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version