மேஷம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பழுதான வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வீர்கள்.

ரிஷபம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

மிதுனம்: நீண்ட நாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள், தனிப்பட்ட தகவல்களைப் பேச வேண்டாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version