உள்நாட்டு விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளில் மும்பை விமான நிலையத்தை முந்தியதன் மூலம் பெங்களூரு விமான நிலையம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் பெங்களூருவின் வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, பெங்களூரு விமான நிலையம் “அக்டோபரில் 20,819 உள்நாட்டு விமானங்களைக் கையாண்டது”. மும்பை விமான நிலையம் 20,540 விமானங்களை தான் கையாண்டு இருக்கிறது. இந்த சாதனை உள்நாட்டு விமானப் போக்குவரத்து தரவரிசையில் மும்பையை பின்னுக்கு தள்ளி விட பெங்களூருவை முன்னிலையில் வைத்துள்ளது. இது கர்நாடகாவிற்கும் அதன் தலைநகரான பெங்களூருவுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.

இந்தியாவில் மும்பை விமான நிலையம் நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமான நிலை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதன் அதிக சர்வதேச போக்குவரத்து காரணமாக ஒட்டுமொத்த விமான இயக்கங்களில் மும்பை தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், உள்நாட்டு நடவடிக்கைகளில் மும்பையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதல் இடத்துக்கு சென்றது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

 

செப்டம்பர் மாதத்தில், மும்பை விமான நிலையம் 19,524 உள்நாட்டு விமானங்களை கையாண்டது, பெங்களூரு 18,884 விமானங்களை கையாண்டது.

https://x.com/IndianTechGuide/status/1994790589292847589?t=dokvuLdmmzTYh7zPe-HJHQ&s=19

செப்டம்பர் மாதத்தை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் பெங்களூரு விமான நிலையம் மும்பை விமான நிலையத்தை விட 279 உள்நாட்டு விமானங்களைக் கையாண்ட விஷயம் உண்மையில் பெரிய விஷயம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மாதம் ( நவம்பர்) பெங்களூர் விமான நிலையும் மும்பை விமான நிலையத்தை விட அதிக உள்நாட்டு விமானங்களை கையாளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

  • 1995 ஆம் ஆண்டில், பெங்களூரு மாதத்திற்கு சுமார் 250 விமானங்களைக் கையாண்டது. மும்பை 1100 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கையாண்டது.
  • அக்டோபர் 2025 இல், பெங்களூரு 20,819 விமானங்களைக் கையாண்டது. மும்பை 20,540 விமானங்களைக் கையாண்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version