Close Menu
    What's Hot

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»இன்று கார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் எது?
    ராசிபலன்

    இன்று கார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் எது?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    krttt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தீப ஒளியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு பண்டிகையாகும். சிவன் மற்றும் திருமால் இருவருக்கு இடையே யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்டபோது சிவன் ஜோதிப் பிழம்பாக நின்ற நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தீப ஒளியானது நம் வாழ்வில் உள்ள இருளை நீக்கி, ஞானம் மற்றும் செல்வத்தை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையுடன் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டில் இது சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 3 மாலை 04:48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 03:08 வரை நீடிக்கிறது. எனவே தீபம் ஏற்றுவதற்கு டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 6:00 மணி என்பது பொருத்தமான நேரமாகும்.

    சில பஞ்சாங்கங்களின்படி கார்த்திகை நட்சத்திரம் நீடிப்பதன் அடிப்படையில் டிசம்பர் 4 வியாழக்கிழமை அன்றும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது டிசம்பர் 3 என்பதால் இந்த நாளே தீபத்திருநாள் கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும்.

    திருக்கார்த்திகை தினத்தன்று காலையில் நீராடி, உபவாசம் இருந்து மாலையில் தீபம் ஏற்றிய பிறகு உணவருந்துவது சிறந்தது. நாள் முழுவதும் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம். பொதுவாக மாலை வேளையில் சூரியன் மறைந்த பின்னர் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றுவது உகந்தது. திருவண்ணாமலைகில் தீபம் ஏற்றிய பிறகு நம் வீடுகளில் தீபம் ஏற்றலாம்.

    தீபம் ஏற்றிய பின்னர் முருகப் பெருமான் விநாயகரை மனதார வழிபடலாம். கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடுவது சிறந்தது. பொரி உருண்டை, அப்பம், அவல், பாயாசம் போன்றவற்றை தயார் செய்து இறைவனுக்குப் படைத்து குடும்பத்தாருக்கும், அண்டை வீட்டாருக்கும் கொடுக்கலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மத்திய அரசு முடிவு
    Next Article கார்த்திகை தீபம்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
    Editor TN Talks

    Related Posts

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    July 2, 2026

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    July 2, 2026

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.