முருக பக்தர்கள் மாநாடு குறித்து பலரும் அவதூறாக பேசி வருகின்றனர்., இந்துக்களை ஒற்றுமை படுத்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது. – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணிய பேட்டி.

மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில்., நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆறுபடை வீட்டின் கோபுரம் போன்ற அமைப்புடன் மட்டுமே மாநாடு நடத்த உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மதுரை வண்டியூர் செல்லும் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் 6 படை வீட்டில் இருந்து பூஜிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து கணபதி ஓமம், வேல் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து., முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை இந்து முன்னணி தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியன் பார்வையிட உள்ளார்.

முன்னதாக,

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் வருகின்ற 13ஆம் தேதி கண்காட்சி நடைபெற உள்ளது. நேற்றயதினம் 6 படை வீட்டிலிருந்து முருகனின் வேல் எடுத்து வந்து மதுரையில் கட்சி அலுவலகத்தில் அதற்கான பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டை பற்றி அவதூறாக பல்வேறு அமைப்பினர் பேசி வருகின்றனர்., இந்துக்களை ஒற்றுமை படுத்தவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள ஏராளமானோர் வருகை தரவுள்ளனர்.

கிறிஸ்துவர்கள் சென்னிமலை தங்களது என கூறியது குறித்து எந்த கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க வில்லை. மேலும்., திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாகவும் இந்த மாநாடு திருப்பு முனையாக அமையும். மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வருக்கு அழைப்பு விடுக்க காத்திருக்கிறோம். அவர் அனுமதி கொடுத்தல் அவரை சந்தித்து அழைப்பு கொடுக்க உள்ளோம். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தனார்., ஆந்திர துணை முதல்வர் பவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளார்.

திமுக மட்டுமின்றி அதனை சாராத நாம்தமிழர் கட்சி மற்றும் இந்துக்களை ஆதரிக்கின்ற கட்சியினர் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவு 13ஆம் தேதி நல்ல முடிவு வரும் என நம்புகிறோம். திமுகவின் அமைச்சர் சேகர் பாபு இந்த மாநாட்டிற்கு வர மாட்டார்கள் என ஏன் கவலை பட வேண்டும்.? ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு தான் மக்கள் வருவார்கள் என கூறுகிறார்.! கடவுள் இல்லை என்று கூறியவர்கள் கூட முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர். தாராளமாக நடத்தட்டும் ஆனால் ஏன் பயப்படுகிறார்.? அச்சுகிறார் என தெரியவில்லை.

இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது 2026 இல் தேர்தல் வருகிறது.! சிறுபான்மை ஓட்டு பறிபோகி விடுமோ என்று எண்ணத்தில் திமுகவினர் உள்ளனர்.

நீங்கள் கூறிய இயக்கங்கள் எல்லாம் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்., இந்துக்களை அவதூறாக பேசுபவர்கள்.! நக்கலைட் சிந்தனைகள் உள்ளவர்களிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது.!

எந்த அரசியல் கட்சி தான் நிதி வாங்காமல் இருகிறது என சொல்லுங்கள்.! பொய்யான அரசியல் செய்யவே மதுரையில் காவல்துறையினர் எங்கள் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்..! இந்த மாநாட்டை தடுக்கவே இதுபோன்ற பொய் வழக்குகள் போட்டு காவல்துறையினர் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் அவர் நிச்சயம் வருகிறேன் என கூறியுள்ளார். அதேபோல்இயக்குனர் மோகன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொள்கிறோம் என கூறி இருக்கிறார்கள் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version