நவம்பர் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
மேஷம்: நீங்கள் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் உள்மனதின் குரலைக்கேட்டு, அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் அன்பானவர்களுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவீர்கள்.
ரிஷபம்: இன்று இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிப்பீர்கள். வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் மன வலிமை காரணமாக நீங்கள் விரும்புவதை சாதிக்க முடியும். அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படும்.
மிதுனம்: வேலைக்கு,ம் குடும்பத்திற்கும் இடையில் உங்கள் நேரத்தை பிரித்து சரியாக கையாள்வீர்கள். குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உங்களது கனவுகள் நனவாகும் நாள் இது.
கடகம்: நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள்.
சிம்மம்: அனைவருடனும் நட்பாக பழகுவீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், கண்மூடித்தனமாக நம்பும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களை வாழ்க்கையில் பெறுவீர்கள்.
கன்னி: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்படும். உங்கள் நகைச்சுவை உணர்வால் சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள்.
துலாம்: உங்கள் அனைத்து கேள்விகளுக்கு இன்று விடைகள் கிடைக்கும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்புள்ளது. உங்கள் மனதை சமநிலையை வைத்திருந்தால் வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.
விருச்சிகம்: உங்கள் கற்பனை திறன் இன்று அதிகரிக்கும். உடல் ரீதியாக பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், மனம் அதிவேகத்தில் எல்லைகளை கடந்து பயணிக்கும். சிந்தித்து செயலாற்றுவது நன்மை பயக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தனுசு: மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளின் தாக்கத்தை தற்போது அனுபவித்து வருகிறீர்கள். ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உடல்நலத்தை பராமரிப்பது அவசியம். ஊக்கத்துடன் வேலை செய்ய தூண்டும், நற்செய்தியோடு உங்கள் பயணம் தொடங்கும்.
மகரம்: உணர்ச்சிகளை கடந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கான பாதையை தீர்மானிக்கும். உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளால் எதிர்கால வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். உங்கள் இயல்பான, பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.
கும்பம்: முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுப்பீர்கள். உணர்ச்சிவசப்படும் பழக்கத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
மீனம்: அலுவலகத்தில் நிறைய வேலைகளுடன் மும்முரமாக இருப்பீர்கள். காதல் விஷயத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படும். ஆனால், மாலை நேரத்தில் என்ன நடந்தாலும், அதை முழு மனதுடன் நீங்கள் வரவேற்க வேண்டும்.
