ந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud) உள்கட்டமைப்பை விரிவுபடுத்த கூடுதலாக 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.1 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த புதிய முதலீட்டின் மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் Amazon Web Services (AWS) தரவு மையங்கள் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு AI சிப்கள், கிளவுட் சேவைகள், AI கருவிகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.

மேலும், இந்தியாவில் தனது இ-காமர்ஸ் மற்றும் க்விக் காமர்ஸ் சேவைகளையும் அமேசான் விரிவுபடுத்த உள்ளது. இந்த ஆண்டிலேயே 20-க்கும் மேற்பட்ட புதிய Fulfilment Centres மற்றும் 100-க்கும் மேற்பட்ட Last-mile Delivery Stations அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக டயர்-3 மற்றும் டயர்-4 நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களின் நலனுக்காக ஏற்கெனவே அறிவித்த 300 மில்லியன் டாலர் முதலீட்டின் ஒரு பகுதி ‘சம்மான்’ (Sammaan) திட்டத்திற்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

2026 முதல் 2030 வரை இந்தியாவில் அமேசானின் மொத்த முதலீடு 48 பில்லியன் டாலராக உயரும். மேலும், 2010 முதல் 2030 வரை இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் மொத்த முதலீடு 88 பில்லியன் டாலரை தாண்டும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version