பிக்பாஸ் ராஜு இயக்கி, நடிக்கும் ‘ஆல் மோஸ்ட் நல்லவன்’ படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் இயக்குநர் பேரரசு நடிக்க உள்ளார்.

திரைப்பட இயக்குநர் எச்.வினோத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆல் மோஸ்ட் நல்லவன்’. பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் இயக்குனராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக துஸ்ரா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், படத்தில் மற்றொரு முக்கியமான வேடத்தில் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் இயக்குநர் பேரரசு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ராஜு, ஒரு இயக்குனராகத் தனது முதல் முயற்சியில் என்ன மாதிரியான புதுமையை செய்யப்போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version