எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் தான் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து இயக்குநர் பார்த்திபன் தனது விளக்கத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்….

பாக்யராஜ் சாருக்கு எழுத்தாளர்கள் சங்க தேர்தல் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிந்தேன்.

ஏற்கனவே அவர் நடுநிலையாக/சிறப்பாக செயல்பட்டிருந்ததால்  தலைமை பதவிக்கு தகுதியானவராக இருப்பினும்,தேர்தலை சந்திக்கும் போது address தேடி வரும் stress-ஐ சமாளிக்க முடியாமல் சற்றே சிரமப் பட்டதாக கேள்விப்பட்டேன்.

இது ஒன்றும் பொது தேர்தல் அல்ல, போட்டியின்றி கௌரவமாக தேர்ந்தெடுத்தால் நீங்கள் தலைமை தாங்குங்கள் இல்லாவிட்டால் அமைதியாக உங்கள் எழுத்தை கவனியுங்கள் என நான் அவரிடம் கூறுவதுண்டு. அவர் மறைவிற்கு பின் என்னிடம் சிலர் அவருக்கு பதிலாக அத்தலைவர் பதவிக்கோ, செயலாளர் பதவிக்கோ போட்டியிட்டால் அமோக வெற்றி பெறலாம், காரணம் தற்போது தங்கள் மீது அபார அபிப்பிராயம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்கள். நான் மென்மையாக அதை மறுத்தேன்.

என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும். என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லி விட்டேன்.வெற்றி பெறும் அணிக்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் 9 அன்று பாரதிராஜா சாருக்கும் பாக்யராஜ் சாருக்கும் ஒரு நினைவு உற்சவம் பிரமாண்டமாக நடத்த தமிழ் திரையுலகம் முடிவெடுத்துள்ளது. அதை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பதே என் அடுத்த தலையாய வேலை.

இவ்வாறு கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version