சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார்.

முதலமைச்சரான பின்னர் திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதிக்கு எப்போது வருவார் எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஜூன் 13ஆம் தேதி (நாளை) மாலை 3 மணிக்கு பெரம்பூர் செல்கிறார் முதலமைச்சர்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை திறந்து வைக்கும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தனது தொகுதி மக்களுக்காகப் புதிய செயலியையும் அறிமுகம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே அடித்தட்டு மக்கள் தொழிலாளர் அதிகம் உள்ள  பகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளது இத்தொகுதியை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்

அதன் முதல் பகுதியாக நாளை பெரம்பூர் வரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சட்டமன்ற அலுவலக திறப்பு, மக்கள் சந்திப்பு  உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் பெரம்பூர் தொகுதியில் செய்யப்பட்டு வருகிறது

முன்னதாக முதல்வரின் கான்வாய் வாகனம் வந்து செல்வதற்கான சோதனை ஓட்டம் இன்று செய்யப்பட்டது.

மேலும் அவருடைய அலுவலகத்தில் E sevai மையம் அமைக்கப்பட்டுள்ளது  இங்கு பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version