உடல் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்று இன்று சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை விமான நிலையத்தில் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அரசியலை அரசியலாக நாங்கள் சந்திப்போம். ஓடுவது, ஒளிவது, பதுங்குவது என்பது தி.மு.க.வினர் பழக்கம் கிடையாது எனக் கூறினார்.

போலீசார் விசாரணைக்குப் பயந்து சிங்கப்பூருக்கு எ.வ.வேலு சென்றுள்ளதாக சூசகமாக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சாடிய நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் வகையில் எ.வ.வேலு இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், . 2016-ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதய நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 2023-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக தொடர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று வந்ததாகத் தெரிவித்தார்.

மேலும் தொடர் சிகிச்சைக்காகவே ஜூன் 25-ம் தேதி சிங்கப்பூர் செல்வதாக இருந்ததாகவும்,  அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தன் வீட்டுக்கு சோதனைக்கு வந்தபோது, அவர்களிடம் தான் சிங்கப்பூர் சென்று வருவதற்கான டிக்கெட்டைக் காண்பித்ததாகவும் கூறினார்.

மேலும் அமலாக்கத்துறையினரிடம் தேவையான ஒத்துழைப்பை அளிப்பதாக உறுதி கூறியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளதாகவும், வற்றை காண்பிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்..

ஜூலை 3ம் தேதி ஆஜராகும்படி தனக்கு  சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,. அதற்கு மரியாதை அளித்து தன்னால் வர முடியாததற்கான காரணத்தை விவரித்து கடிதம் எழுதியிருப்பதாகக் கூறி அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டினார். எனவே தான், மருத்துவத்துக்காக தான் சிங்கப்பூர் சென்றேனே ஒழிய, சுற்றுலாவுக்காக செல்லவில்லை என்றார்.  விசாரணைக்காக ஒத்துழைக்கிறேன் எனக்கூறிய பின்னும், ஓடுகிறேன், ஒளிகிறேன் என கூறுவதாகவும் சாடினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version