அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஜாஸ்க் (Jask) துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு ஈரான் வீரர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வணிக சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் இந்த புதிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா பதிலடி நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

 

இந்த மோதல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளும் உயர்வை நோக்கி நகர்ந்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version