த்திய அரசு அறிவித்துள்ள தேசிய திரைப்பட விருதுகளில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சிறந்த பின்னணி இசைக்காகத் தனது 3-வது தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரது மாமாவும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஆஸ்கார் நாயகன் .ஆர்.ரஹ்மான், தனது எக்ஸ் தளத்தில்  நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில், “என் அன்புத் தம்பி ஜி.வி.பிரகாஷ், உங்களின் 3-வது தேசிய விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நாம் இணைந்து கொண்டாடும் 10-வது தேசிய விருது என்பதால் இது எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம்.

இசையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது.

இன்னும் பல உயரிய மைல்கற்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இறைவன் உங்களை என்றும் ஆசீர்வதிக்கட்டும்” என வாழ்த்தி உள்ளார்.

.ஆர்.ரஹ்மான் இதுவரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷின் 3 விருதுகளையும் சேர்த்து இவர்களது இசைக் குடும்பம் மொத்தம் 10 தேசிய விருதுகளைத் தங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து பெருமை சேர்த்துள்ளது.

மாமாவின் இந்த பாசப் பதிவிற்கு, ஜி.வி.பிரகாஷ் உடனடியாகலவ் யூ சார்என்று இதயக் குறியீட்டுடன் தனது நன்றியையும் அன்பையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version