Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»நடிகர் ஸ்ரீகாந்த் கைது… போதைப் பொருள் பயன்படுத்தியது அம்பலம்… அதிமுக பிரமுகரும் உடந்தை…
    சினிமா

    நடிகர் ஸ்ரீகாந்த் கைது… போதைப் பொருள் பயன்படுத்தியது அம்பலம்… அதிமுக பிரமுகரும் உடந்தை…

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025Updated:June 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    21 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சினிமா துறையில் போதைப் பொருள் பழக்கமும், புழக்கமும் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. சினிமாவில் உள்ள சிலரே இது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அப்படியிருக்க, நடிகர் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் கைதாகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்தவர் ஸ்ரீகாந்த். 2000-களின் முற்பாதியில் ஹீரோவாக வலம் வந்தவர், பின்னாளில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான தினசரி என்ற படத்திற்காக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். இப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகியுமான சிந்தியாவால் கேலி, கிண்டலுக்கு உள்ளானார் ஸ்ரீகாந்த்.

    தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் வெப் சீரிஸ், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில், அதிமுக வழக்கறிஞர் பிரசாந்த் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் ஸ்ரீகாந்திடம் விசரணை மேற்கொண்டனர். மேலும் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தினர். பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவரவே, நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கானா நாட்டை சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேரறிஞர் அண்ணாவுக்கு பதில் அமித் ஷாவா? அதிமுகவுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி..
    Next Article பட்டியலினத்தைச் சேர்ந்த புகார்தாரர் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம்.. 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி..
    Editor TN Talks

    Related Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    June 21, 2026

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.