இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், நிஹாரிகா, வைபவ், சாந்தினி, சுனில் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’பெருசு’. 18+ காமெடி திரைப்படமாக உருவாகியிருந்தது இப்படம். பாக்ஸ் ஆபிசில் பின்னடைவை சந்தித்தாலும் கூட, விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் நடித்திருந்த நிஹாரிகா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ’மிஷன்-இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்’ படத்தின் பிரீமியர் ஷோவில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிஹாரிகா அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ”கனவில் கூட இப்படி நடக்கும் என்று நினைக்க தைரியம் இல்லாத எனக்கு, அதனை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார் நிஹாரிகா.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version