தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அதேப் போல அதிக வசூல் செய்யும் நடிகராகவும் வலம் வருகிறார். நடிப்பை தாண்டி கார் பந்தயங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். சுமார் 60 படங்களில் நடித்துள்ள அஜித், சமீபமாக நடித்து வரும் படங்களில் தனது திறமையை வெளிக்கொணரும் வகையில், ஒரு ரேஸ் சேசிங் சண்டை காட்சிகள் இடம்பெறும் வகையில் நடித்து விடுவார். ரசிகர்களாலும் அது மிகவும் ரசிக்கப்படும்.
இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், சினிமாவிற்கு சின்ன பிரேக் விட்டுவிட்டு ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வாரம் பெல்ஜியமில் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது. தற்போது பிரான்சில் நடந்து வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எப்1′ என்ற கார் பந்தயத்தை மையப்படுத்திய திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதை குறிப்பிட்டு கார் பந்தயத்திற்கு இடையே அஜித்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ், எப்1’ படங்களின் தொடர்ச்சியில் நடிப்பதற்கு ஆசை, பொதுவாகவே நான் நடிக்கும் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நானே நடித்து வருவதால், அதுப்போன்ற படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிலளித்துள்ளார். அஜித்குமாரின் இந்த பதிவு, ஹாலிவுட் இயக்குநர்கள் கவனத்திற்கு வந்தால், ஹாலிவுட்டிலும் அஜித் கால்பதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
