நடிகர் அர்ஜூன் தாஸின் ’ரசவாதி’ என்ற திரைப்படம் மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றுள்ளது.

சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படம் ”ரசவாதி”. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது. இப்படத்திற்காக அர்ஜூன் தாஸூக்கு நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதையும் இப்படம் வென்றது. இந்த நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற NICE சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை இப்படத்திற்காக சரவணன் இளவரசு மற்றும் சிவா ஆகியோர் வென்றுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version