அவெஞ்சர்ஸ் திரைப்பட கதா படத்தில் பிளாக் பேந்தர் என்று சொன்னாலே ஒருவரது முகம் தான் நம் அனைவருக்கும் நினைவில் வரும். அது மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன் தான். பிளாக் பேந்தர் திரைப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் மிக கனகச்சிதமாக நடித்து உலக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். அவரது நடிப்பு வெகுளவு பாராட்டப்பட்டது. உலக அளவில் சுமார் 1.382 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 29ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1993 ஆம் ஆண்டு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக அடி எடுத்து வைத்து பின்னர் 2003 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். முழு நீள திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கியவர் 2020 ஆம் ஆண்டு வரை நடித்து, ஆகஸ்ட் மாதம் 2020 28ஆம் தேதி உடல் நலவு குறைவு காரணமாக இயற்கை எய்தினார். நல்ல நடிப்பு திறமையை கொண்ட அவரது மறைவு திரை உலகை மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.
அவர் மறைந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் ( Walk of Fame : Hollywood ) நடைபாதையில் சாட்விக் போஸ்மீனை கௌரவிக்கும் வகையில் அவருக்கு நட்சத்திரம் வழங்கப்பட்டது. பொதுவாக திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் பிரபலங்களின் பெயர் நட்சத்திரத்தில், ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நடைபாதையில் பொறிக்கப்படும்.
அதன் வரிசையில் சாட்விக் போஸ்மேனனின் பெயர் நேற்று ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நடைப்பாதையில் அவருக்கான நட்சத்திரத்தில் பொறிக்கப்பட்டது. இந்த விழாவில் அவரது மனைவி, குடும்பம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என அவருக்கு சொந்தமான அனைவரும் கலந்து கொண்டனர். பிளாக் பேந்தர் திரைப்படத்தை இயக்கிய ரியான் கூகுளர், மற்றும் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் விழாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சாட்விக் போஸ்மேனனை நினைவு கூர்ந்து, அவரைப் பற்றி பேசினார்கள். அதில் குறிப்பாக பிளாக் பேந்தர் திரைப்படத்தை இயக்கிய ரியான் கூகுளர், சாட்விக் போஸ்மேன் தனக்கு கொடுத்த காப்பர் பிரேஸ்லெட்டை நினைவு கூர்ந்து கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
https://x.com/etnow/status/1991641035718684781?t=adL3QI9oEqs6Ix_TrC7-wg&s=19
