அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்பொழுது 88.81 ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு தூரம் கீழே வந்தது அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது.
அமெரிக்க நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் கீழே இறங்கி கொண்டிருக்கும் மிக முக்கிய காரணம் நமது ஏற்றுமதி மிக குறைவாகவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி மிக அதிகமாகவும் இருப்பதுதான். அது மட்டும் இன்றி இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சற்று பதட்ட நிலையில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அரசாங்கம் நிர்ணயித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நீடித்துக் கொண்டு வருகிறது. ஜவுளி, காலணி, தோல் மற்றும் இறால் ஏற்றுமதிகள் முடங்கியுள்ளதும் கூடுதல் தகவல். ஏற்றுமொழியாளர்கள் பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு விரைவில் ஏற்றுமதியை அதிகப்படுத்தும் செயல்களை செய்யும் என்று வல்லுநர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
