சினிமா திரையுலகில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது என்றால், உடனே அப்படங்களில் நடித்தவர்களுக்கு இடையே போட்டி, மனக்கசப்பு, சண்டை என கதைகட்டி விடுவார்கள்… அந்த வகையில், சமீபத்தில் பிரபல நடிகைகளான சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோருக்கு இடையே பிரச்னை என தகவல் பரவியது.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளை தாண்டி பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. அதேப் போல நடிகை ஸ்ரீலீலாவும் பாலிவுட்டில் வலம் வரத் தொடங்கியுள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா…’ பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். புஷ்பா-2 படத்தில் சமந்தாவுக்கு பதில் ஸ்ரீ லீலா ‘கிஸ்ஸிக்’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலைப் போல் இந்த பாடலும் பெரிய அளவில் பிரபலமானது. இதையடுத்து சமந்தாவுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சலசலப்புகள் எழுந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் சமந்தாவும், ஸ்ரீ லீலாவும் பங்கேற்றனர். அப்போது தனியாக நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த சமந்தா ஸ்ரீலீலா வருவதை கண்டதும் அவரை அருகில் அழைத்து கட்டிபிடித்தபடி போஸ் கொடுத்தார். இதையடுத்து அவர்களது உறவில் பிளவு என பரவிய தகவல்களுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version