பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரிட்டி சனோன் நடித்த “தேரே ஈஸ்ட் மெயின்” திரைப்படம் வரும் நவம்பர் 28ஆம் தேதி அன்று உலக அளவில் வெளியாகிறது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பிரமோஷன் வேலைகள் நாளுக்கு நாள் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று படக்குழு திரைப்படத்தை பிரமோஷன் செய்ய டெல்லிக்கு வந்திருந்தனர்.
இன்று டெல்லியில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் நகைச்சுவையாக ஒரு விஷயத்தை பரிமாறினார். “நான் என் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இடத்தில் முதலில் ராஞ்சனா, பின்னர் அட்ராஞ்சி ரே தற்போது தேரே இஷ்க் மெயின் இது போன்ற திரைக்கதையில் என்னை ஏன் தொடர்ந்து நடிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களுடைய முகம் லவ் ஃபெயிலியர் முகம் ( காதல் தோல்வி கலந்த முகம் )என்று கூறினார்.
அதைக் கேட்ட பின்னர் நான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன். நம் முகம் அப்படியா இருக்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் நான் அதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்”, என்று தனுஷ் சற்று நகைச்சுவையுடன் கூறினார்.
ஆனந்த் எல் ராய் தன்னுடைய முகத்தை லவ் ஃபெயிலியர் முகம் என்று தனுஷ் சொன்ன அடுத்த நொடியே படத்தின் கதாநாயகி க்ரிட்டி சனோன், “உங்களுக்கு இதயம் உடைந்த மனிதனின் முகம் இருக்கிறது”, என்று கூறினார். தனுஷ் நகைச்சுவையாக பேசிய அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://x.com/Its_CineHub/status/1992263923043897785?t=RCBRlQSQwRNknJwl6WX3Ag&s=19
பாலிவுடில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ராஞ்சனா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இவர்கள் இருவரது கூட்டணியில் அட்ராஞ்சி ரே திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர்கள் இருவரது கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக வரும் நவம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படமும் நிச்சயமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
