இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் பாகம் 2 மிகப் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே திரைப்படத்தில் ஒருபுறம் பாலையா நடிப்பதாகவும் மற்றொருபுறம் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தன. அவை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்பொழுது இத்திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகிவிட்டது.

கோவையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தனை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் உடன் பேட்ட திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்தது கூடுதல் தகவல்.

ஜெய்லர் படத்தின் தொடர்ச்சி என்பதால் ஏற்கனவே இந்த திரைக்கதையில் மோகன்லால் சிவராஜ்குமார் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு ஆகிய முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். தற்பொழுது விஜய் சேதுபதி இதில் இணைந்துள்ளது படத்தின் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
