ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி இயக்கும் வாரணாசி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டோருக்கான சம்பளம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தப் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு ருத்ரா, ராமா என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ராஜமவுலி. மகேஷ் பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார்.
வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற கதாபாத்திரத்திலும் பிருத்வி ராஜ், கும்பா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். பெரிய பொருட்செலவில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.1200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
