ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனான குழந்தை விவகாரத்தில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

இந்தச் சூழலில், பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி  ரங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ கடிதப் மூலம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாகவே முழுப் பொறுப்புடனும் அன்புடனும் தான் நிறைவேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களிலும் தனது வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலம், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காகத் முழுப் பொறுப்புடனும் உறுதுணையாக நிற்பேன் என்று அவர் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார். நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த இந்த விவகாரம், தற்போது டிஎன்ஏ முடிவுகள் மற்றும் தந்தையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version