பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய படைப்புக்கு பிறகு மணிரத்னம் ’தக் லைஃப்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்குகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவிய நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் எகிறது. அதற்கு தீனி போடும் விதமாக படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு அறிவித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (24.05.2025) பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, ”பீப் சாங்” சர்ச்சை எழுந்தபோது ஏ.ஆர்.ரகுமான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், ஏ.ஆர்.ரகுமான் வாய்ப்பளித்ததால் பல மொழிகளில் தாம் 150 பாடல்களை பாடியுள்ளதாக சிலம்பரசன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும்போது குரல் தழுதழுத்தார்”.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல்ஹாசன், ”தாம் ஒரு சினிமா ரசிகன் என்றார். தாம் திரைப்படங்களை தயாரிக்கும்போது நிறைய கஷ்டப்பட்டதாக கூறிய கமல்ஹாசன், நடுநடுவே அரசியலையும் பேசினார். சொந்த பணத்தில்தான் கட்சி நடத்துவதாக கூறிய அவர், முதலமைச்சராவதற்காக தாம் கட்சி நடத்தவில்லை என்றும், 0 வருஷம் ஒரு எம்எல்ஏ என்ன செய்ய வேண்டுமோ அதை, நான் மெல்ல மெல்ல செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.