தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகி வரும் தகவலை நடிகர் கேபிஒய் பாலா மறுத்துள்ளார்.

விஜய்யின் புதிய அரசியல் கட்சியான தவெகவில் அடுத்தடுத்து பிரபலங்கள் சேர்ந்து வருகின்றனர்.  இந்நிலையில், தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சேவை செய்து வரும் பாலா, தவெகவில் இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து, புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ‘தேடல் சேவகன்’ என்ற அமைப்புக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கேபிஒய் பாலாவிடம் கேட்கப்பட்டது.  அதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த ஆம்புலன்ஸை பயன்படுத்த பணம் எதுவும் கிடையாது. மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “உதவுவதற்கு எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை. சம்பாதிப்பதை சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே என்னிடமுள்ளது . கடைசி வரைக்கும் சம்பாதிப்பதை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

விஜய் கட்சியில் இணைய திட்டமா என்று கேட்டதற்கு, “அரசியல் நோக்கம் ஏதுமில்லை. கடைசிவரை சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version