மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தில் லாலட்டன் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிரஞ்சீவி தற்போது அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தில் நடித்து வருகிறார். ஜனவரி 12-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதவாக படக்குழு தெரிவித்துள்ளது.
