தனது மார்பிங் போட்டோ குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து மிரட்டும் செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கவிஞர் வைரமுத்து குறித்து குற்றச்சாட்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணக்கூடியவர் பாடகி சின்மயி. ஆனால் சமீபத்தில் சின்மயின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, சமீபத்தில் ஒரு நடிகையின் மார்பிங் போட்டோவுக்கு கண்டனம் தெரிவித்து போலீசில் புகார் அளித்திருந்தார் சின்மயி. அதற்குப் பதிலடியாக, அவரது போட்டோக்களையே மார்பிங் செய்து மிக மோசமான கேப்ஷன்களுடன் வைரலானது. இதனால் ஆத்திரமடைந்த சின்மயி, அந்த போட்டோக்களையும் கமெண்ட் செய்தவர்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

வீடியோவில்,“பெண்கள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும், ஆண்களுக்கு அடங்கி போக வேண்டும் என்ற ஆணாதிக்க எண்ணம் இன்னும் சமூகத்தில் உள்ளது. அடங்கிப் போகாத பெண்களைத் தான் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்கும் பெண்களைத் தான் தவறாக சித்தரிக்கிறார்கள். மார்பிங் போட்டோக்களை உருவாக்கும் இந்தக் குரூர புத்தி கொண்ட ஆண்களுக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது பேசியுள்ளார்.

சின்மயி தொடர்ந்து, “இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல; பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான அவமானம். இதை எதிர்த்துப் பேசினால் மீண்டும் இதே போல் செய்வார்கள். ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version