இந்த வார நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. ட்ரோல் செய்கிறவர்களும், செய்யப்படுவர்களும் என்கிற தலைப்பில். வழக்கமான மெட்டிரியலில் இருந்தது நீயா நானா. சமூக வலைதளங்களில் பத்தாண்டுகளுக்கு மேல் குப்பைக்கொட்டிக்கொண்டு இருக்கும் காரணத்தால் இதை சொல்லாம் என்று தோன்றுகிறது.
சமூக வலைதளங்களில் ஏதோ ஒன்றை எழுதி ஏதோ ஒரு காரணத்தினால் அறிவு ஜீவியாக தன்னை உணர்ந்தவர்கள். சில வருடங்கள் கழித்து நிச்சயம் ஒரு பதிவை இட்டு இருப்பார்கள்.அது என்னவென்றால் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது, அதையே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருப்பது ஆபத்து. நமது நேரத்தை மட்டுமல்லாது நமது அறிவையும் தின்று தீர்க்கிறது என்று. இதை அவர்கள் சமூக வலைதளங்களில் தான் எழுதுகிறார்கள். என்பதும், அதை நாம் சமூக வலைதளங்களில் இருந்து தாம் படித்தாக வேண்டும் என்பதை அவர்கள் உணரமால் இல்லை . இருந்தும் இந்த கருத்து ஏன் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படுகிறது.? என்றால் அந்த தளம் இன்றி வேறு எங்கும் இந்த கருத்தை அவர்களால் முன் வைக்க முடியாது. பின் எப்படி சமூக வலைதளம் நம் நேரத்தை திண்ணும்.
இன்றும் நீயா நானா போன்ற டாக் ஷோக்களின் மேடைகளில் அமர்ந்து இருப்பவர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பிரபலமனவர்கள் தான். அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவே தன்னை எழுத்தாளார் – சமூக செயல்பாட்டாளார் கவிஞர் மற்றும் சினிமா ஆய்வாளர் என்று பிரகடனபடுத்தியவர்கள் தான்.
சமூக வலைதளம் யாவருக்கும் தன்னை எப்படி வேண்டுமானலும் முன் நிறுத்திக்கொள்ள அமைக்கப்பட்ட ஓர் தளம்.. இதில் பெரும்பாலும் தன்னை ஓர் ஜோக்கராக முன் நிறுத்துபவர்களையே உற்று பார்க்கிறது. காரணம் வெரி சிம்பிள். சமூக வலைதள பார்வையாளர்களுக்கு அந்த 30 நொடி அல்லது ஒரு நிமிட பொழுதுபோக்கு தாம் தேவை . அதனாலயே டிக் டாக், ரீல்ஸ் போன்ற வீடியோக்கள் ஹிட் அடிக்கிறது. இது முக்கி முக்கி கட்டுரை எழுதுபவர்களை எரிச்சல் படுத்துகிறது. ஆக்கபூர்வமாக எழுதும் எழுத்தாளர்களை அல்ல.. அவர்கள் அறிவுஜீவிகள் சமூக வலைதளம் இல்லையென்றாலும் அவர்கள் இயங்கிகொண்டு தான் இருப்பார்கள் அது வேறு.
சிக்கல் நான்கு புத்தகம் எழுதி தன் முகப்பில் வைத்துக்கொண்டு இருப்பார்கள் தான் இந்த சமூக வலைதளம் நேரம் குடிக்கிறது. ரீல்ஸ் போன்ற வீடியோக்கள் முட்டாள்களின் இருப்பிடம் என்று கதறிக்கொண்டு இருப்பது.
துணிவு – குட் பேட் அக்லி போன்ற படங்களுக்கே ஜி.பி முத்து போன்ற ஆட்கள் தேவைப்படும் காலம் இது. ரீல்ஸ் போன்ற வீடியோக்கள் அறிவை தேடுபவர்கள் உண்மையில் சமூகத்திற்கு வெளியே தள்ளப்படவேண்டியவர்கள்.
சமூக வலைதளம் மட்டுமல்ல உலகம் முழுவதுமே “வலிமையானதே வெல்லும்” என்கிற சொற்பதம் வழக்கொழிந்து போய்” வாய்ப்பு உள்ளவையே வெல்லும்” என்கிற காலம் நம் முன்னே இருக்கிறது. அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா சொல்வது போல , அது பாகிஸ்தானின் கையாக இருந்திருந்தாலும் உலகம் முழுவதிலும் இருந்த தன் ஆதரவை பெற இந்தியா தவறவிட்டிருந்தது. பாகிஸ்தானை விட இந்தியா வலிமையாக இருந்தாலும், இந்த போரில் இந்தியா உலக அரங்கில் தனக்கான ஆதரவை பெற வாய்ப்புகள் இருந்தும் அதை தவற விட்டிருந்தது என்பதே உண்மை. அப்படி இந்த இந்த போரை தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருந்தால் உலக அரங்கில் இந்தியாவின் வலிமை இன்னும் கூடியிருக்கும். வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்த தவறினால் என்ன வலிமையாக இருந்தும் என்ன பயன்.?
சமூக ஊடகம் என்பது அதுமாதிரி ஒரு தளம். இங்கு உங்களை எப்படி முன்னிலைப்படுத்துகிறீர்களோ அதற்கான பயன் கூடியவிரைவில் கிட்டும். அப்படி அமையாவிட்டாலும் ஒன்று குறையென்றுமில்லை. வெளி உலகம் உங்களை அரவனைத்துக்கொள்ளும். சமூகத்திற்கு அது ஏற்புடையதோ? இல்லையோ?, உங்கள் வாழ்வில் பொருளாதார தளத்தில் முன்னேற சமூக வலைதளம் ஒரு கருவியாக பயன்படுமானால் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது அறிவுஜீவியாக இருந்தால் என்ன?? ஜோக்கராக இருந்தால் என்ன? ரசிப்பதற்கு மனிதர்கள் தான் முதன்மை.
Vijis Palanichamy.