ஜவான் படத்தில் நடித்தற்காக நடிகர் ஷாருக்கானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஹிந்தியில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஜவான் படத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்தார். ரூ.1000 கோடி வசூலை குவித்தது ஜவான் திரைப்படம். தனது 33 வருட சினிமா வாழ்க்கையில் ஷாருக்கான் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், அவர் முதல் தேசிய விருது பெற்ற படம் ஜவான். இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், கையில் காயத்துடன் திரைத்துறையினருக்கும், இயக்குநருக்கும் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version