இசைக்கு எப்படி இளையராஜா முடிசூடா மன்னனோ, அதேப் போல குரல்களின் மன்னன் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இன்று அவரது 80வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. என்னதான் அவர் இன்று உலகில் இல்லையென்றாலும் கூட அவரது குரலால் அவர் பாடிச் சென்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இன்று வரையிலும் நம்முடன் கலந்து இருக்கிறார். அவர் படைத்த சாதனைகளின் தொகுப்பு இதோ..!

* எஸ்.பி.பாலசுப்ரமணியன் சுமார் 40,000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

*6 முறை சிறந்த பின்னணிப் பாடகருகான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.

*எஸ்.பி.பி முறையாக கர்நாடக இசையை பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

*இதுவரை 4 மொழிகளுக்கு தேசிய விருதினை பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி.

*தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.

*12 மணி நேரத்தில் 21 பாடல்களை பாடி சாதனை.

* ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களையும், ஒரே நாளில் 16 இந்தி பாடல்களையும் பாடி அசத்தல்.

* தசவதாரம் தெலுங்கு படத்திற்காக கமல்ஹாசன் நடித்த 10 கதாபாத்திரங்களில் 7 கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version