வரும் பிப்ரவரி 26ம் தேதி நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகா மந்தனாவும் எப்போதும் தங்கள் உறவை மறைத்து வைத்திருந்தாலும், அவர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் நல்ல நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட விழாவில் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத சூழலில் அவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 26ம் தேதி  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தகவல்களின்படி, இவர்களது நிச்சயதார்த்தம் அக்டோபர் 3 ஆம் தேதி விஜய் தேவரகொண்டா வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களின் நிச்சயதார்த்தத்தின் புகைப்படங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version