மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை டேக் ஆப், மாலிக் படங்களை இயக்கிய இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் குஞ்சாக்கோ போபன், பகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கைய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்கும் 8-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இப்படத்திற்கு “பேட்ரியாட்”
என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இலங்கை சுற்றுலாத்துறை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ‘பேட்ரியாட்’ என்கிற படத்தில் நடிப்பதற்காக வரும் மோகன்லாலை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். நடிகர் மோகன்லாலும் பேட்டி ஒன்றில் படத்தின் டைட்டில் பேட்ரியாட் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.