Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»“வேட்டுவம்” படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மோகன் ராஜ் மரணம் – படக்குழு ஆழ்ந்த இரங்கல்
    சினிமா

    “வேட்டுவம்” படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மோகன் ராஜ் மரணம் – படக்குழு ஆழ்ந்த இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025Updated:July 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250715 WA0003
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜூலை 13 ஆம் தேதி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், நீண்டகாலமாகப் படக்குழுவுடன் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

     

    படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம்போலவே கிராஷ் காட்சியைப் படமாக்குவதற்கு முன், தெளிவான திட்டமிடல் மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளைத் திட்டமிட்டு, செயல்படுத்துவதில் நிகரற்ற கலைஞராகத் திகழ்ந்த மோகன் ராஜின் வழிகாட்டுதலையும், சண்டை இயக்குனர் திலீப் மாஸ்டரின் விரிவான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் மதித்து, தவறாமல் பின்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்
    கண்ணீர் அஞ்சலி

    ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில்… pic.twitter.com/n8JdXgYV18

    — pa.ranjith (@beemji) July 15, 2025

    “ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்” என்று படக்குழு வேதனையுடன் தெரிவித்துள்ளது.

     

    செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு, தனது நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களைப் பெருமைப்படுத்திய கலைஞர் அவர் என்றும், ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றும் அவருக்குச் சமர்ப்பணம் என்றும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

     

    “இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்” என்று படக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Condolences Dilip Master Film Crew Film Set Accident Mohan Raj Nagapattinam Stunt Artist tamil nadu Tragic Loss Vettuvam இரங்கல் சண்டைக் கலைஞர் தமிழ்நாடு திலீப் மாஸ்டர் துயரச் சம்பவம் நாகப்பட்டினம் படக்குழு படப்பிடிப்பு விபத்து மோகன் ராஜ் வேட்டுவம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் Vs நடிகர் ரவி மோகன் வழக்கு.. நீதிமன்றம் கூறியதென்ன?
    Next Article வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத DSP… சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!
    Editor TN Talks

    Related Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    தந்தை பெரியாரின் 52வது நினைவுநாள்!. முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!.

    December 24, 2025

    அதிமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் நிறைவு! 10,000-க்கும் மேற்பட்டோர் மனு

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.