வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ரேணிகுண்டா படத்தின் அடுத்த அத்தியாயமான ரேணிகுண்டா 2 படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்களில் ஒன்றாக 2009ம் ஆண்டு வெளியான “ரேனிகுண்டா” அமைந்தது. இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான இப்படம், அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ரேணிகுண்டா படத்தின் அடுத்த அத்தியாயமாக “ரேனிகுண்டா – 2” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிங்ஸ் ஸ்டுடியோ, பன்னீர்செல்வம் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகும் ரேனிகுண்டா 2 படத்தை இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார். மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை கவிஞர்கள் யுகபாரதி மற்றும் விவேகா எழுதியுள்ளனர். இப்படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷாமி திலகன், நிஷாந்த், கனிஃபா, தமிழ்செல்வம், சுந்தீப், ஆஹானா, அருண், ஜெசிந்தா, வேலா ராமமூர்த்தி, ஹரீஷ் பேரடி, சுஜாதா மற்றும் சுர்பி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ரேனிகுண்டா 2‘ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
