கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு மேற்கொண்டார்,

 அப்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் பகுதி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் நீர் செல்லும் இடங்களை பார்வையிட்டார்.

அணையின் மேற்புறத்தில் சென்ற அமைச்சர் கீர்த்தனா, மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அணையில் செல்லும் ரசாயன நீர் குறித்தும் கழிவுகள் குறித்தும் கேட்டறிந்தார், அப்போது அதிகாரிகள் கர்நாடக பகுதியிலிருந்து வரும் நீர் அளவு மற்றும் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்தும் ஓசூர் பகுதியில் கெலவரப்பள்ளி அணை பாசன நிலங்கள் மற்றும் சாகுபடி பயிர்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த ஆய்வின் போது அமைச்சரிடம், ஓசூர் பகுதி விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அணைக்கு கழிவு நீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விவசாயிகளின் நியமான

இந்த கோரிக்கை மனுவினை  நிச்சயம் தமிழக  முதலமைச்சரிடம் வழங்கி நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளுடம் அமைச்சர்  தெரிவித்தார்,

அப்போது சட்ட மன்ற உறுப்பினர் முகுந்தன் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரில் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version