மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்து வரும் புதிய காதல் திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணிரத்னம் தனது புதிய திரைப்படத்திற்காகக் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் நள்ளிரவு 1:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை தீவிரப் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். இப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்திற்காகக் கொல்கத்தா ஹவுரா பாலம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம், சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்குத் தனது குழுவுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
கொல்கத்தாவின் ஹவுரா பாலம், குமார்த்துலி, பார்க் ஸ்ட்ரீட் மற்றும் பெல்காச்சியா ராஜ்பாரி ஆகிய முக்கியப் பகுதிகளில் சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
