நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் ரவி மோகன் முன்வைத்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தியின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

நடிகை குஷ்பு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்த்தி ரவி, அவரது குழந்தைகள் மற்றும் ஆர்த்தியின் குடும்பத்தினர் ஆகியோர் மிக நெருக்கமாகச் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகைப்படத்திற்கு “#MyFamily” என்ற ஹேஷ்டேக்கை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்த்திக்குத் தனது முழுமையான ஆதரவு உண்டு என்பதை வெளிப்படையாகக் காட்டும் விதமாகவே குஷ்புவின் இந்தப் பதிவு அமைந்துள்ளது.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இவ்வளவு பெரிய பேசுபொருளாக மாற முக்கியக் காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் அளித்த உணர்ச்சிகரமான செய்தியாளர் சந்திப்புதான். அந்தப் பேட்டியில், தனது குடும்பப் பிரச்சனைக்கும், விவாகரத்து விவகாரத்திற்கும் பின்னணியில் ‘3 எழுத்து இட்லி நடிகை’ ஒருவர் இருப்பதாகவும், அவர்தான் தனது வாழ்க்கையைச் சீரழித்ததாகவும் ரவி மோகன் மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். அவர் வெளிப்படையாகப் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், அது நேரடியாக நடிகை குஷ்புவைத்தான் குறிக்கிறது என சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

ரவி மோகனின் அந்த மறைமுகக் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, “நாங்கள் ஒரே குடும்பம்” எனக் காட்டும் வகையில் குஷ்பு தற்போது இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குஷ்புவின் இந்தப் பதிவு ரவி மோகன் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version