அமெரிக்காவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் சேர்வதற்காக எழுதும் SAT தேர்வை 12 வயது மாணவன் எழுதி ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக பொதுவாக 16 வயதுடைய மாணவர்கள் எழுதும் புகழ்பெற்ற SAT தேர்வை, அபுதாபியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவன் அர்ஜுன் பட்வர்தன் எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இந்தத் தேர்வின் கணிதப் பிரிவில் 800-க்கு 750 மதிப்பெண்களையும், மொத்தமாக 1600-க்கு 1290 மதிப்பெண்களையும் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

மேலும், அவரது இந்த அபார திறமையை பாராட்டி, உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் “Center for Talented Youth (CTY)” வழங்கும் உயரிய “Grand Honors” விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவன் அர்ஜுன் இந்தத் தேர்வுக்காக எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், முழுமையாக வீட்டிலிருந்தபடி தன்னம்பிக்கையுடன் படித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். ‘College Board’ வழங்கிய மாதிரித் தேர்வுகள் மற்றும் ‘Khan Academy’ இணையவழி கல்வி வளங்களை மட்டுமே பயன்படுத்தி அவர் இந்த உயரத்தை எட்டியுள்ளார்.

அர்ஜுனின் இந்த சாதனை, வயது என்பது வெற்றிக்கு தடையல்ல என்பதையும், ஆர்வம், ஒழுக்கம் மற்றும் தொடர்ந்து முயற்சி செய்தால் உலக அளவிலான சாதனைகளையும் எட்ட முடியும் என்பதையும் நிரூபிக்கிறது.

இளம் சாதனையாளர் அர்ஜுன் பட்வர்தனுக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version