கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த ‘கரும்பி’ என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்று, உலகிலேயே மிகவும் குள்ளமான ஆடு என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்  இடம்பிடித்துள்ளது. இந்த ஆட்டின் குள்ளமான உருவமே இதை உலக அளவில் பிரபலமாக்கியுள்ளது.

4 வயதாகும் இந்தக் கரும்பி ஆட்டின் முழு உயரம் வெறும் 40.50 சென்டிமீட்டர் மட்டுமே உள்ளது. இந்த ஆடு கனடா நாட்டைச் சேர்ந்த ‘பிக்மி’ (Pygmy) என்ற சிறப்பு இனத்தைச் சேர்ந்ததாகும். பொதுவாகவே இந்த இனத்தைச் சேர்ந்த ஆடுகள் அதிக உயரமாக வளராத இயல்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டின் உரிமையாளரான பீட்டர் லீனு என்பவர் கூறுகையில், ஆரம்பத்தில் இதன் சிறப்பைத் தான் பெரிதாக உணரவில்லை என்றும், அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ஆட்டின் அபூர்வமான குள்ளத் தன்மையைக் கவனித்துத் தெரிவித்த பிறகே, இதை கின்னஸ் சாதனைக்காகப் பதிவு செய்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தச் சுட்டி ஆட்டின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version