நைஜர் நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 42 வீரர்கள் உயிரிழந்தனர்.
மடாவா பகுதியில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Doukou Doukou என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு பேருந்துகள் மோதிய இந்த கோர விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வியாழக்கிழமையன்று தங்களது ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த உதவி அதிகாரிகள் உட்பட 42 வீரர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 18 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்; அவர்கள் தற்போது கவலைக்கிடமான நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வருவதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், ராணுவத்துக்கென சொந்தமாகப் போக்குவரத்து வாகனங்கள் இருந்தபோதிலும், வீரர்கள் ஏன் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும், இந்தத் தனியார் போக்குவரத்து ஏற்பாடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்பாக உடனடியாக எதுவும் தகவல் கிடைக்கவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
