தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, திமுக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், தேமுதிக 10, விடுதலைச்சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்டிபிஐ 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணியில் பட்டதாரிகள் 125 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 17 பேர், சட்டம் படித்தவர்கள் 29 பேர், முனைவர்கள் 7 பேர், மருத்துவர்கள் 15 பேர் உள்ளதாகவும் புதுமுகங்கள் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
