2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொளத்தூர் தொகுதியின் முடிவு. திமுக-வின் கோட்டையாகவும், கடந்த 2011 முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதியாகவும் கருதப்பட்ட கொளத்தூரில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் இறுதி நிலவரப்படி, வி.எஸ். பாபு சுமார் 8,452 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலினை வீழ்த்தியுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஒருவரே தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தது திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் இந்த வெற்றி, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தனது பலமான கோட்டையிலேயே மு.க. ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருப்பது, 2026 தேர்தலில் தவெக-வின் எழுச்சி எந்த அளவிற்கு வீரியமாக உள்ளது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து, கொளத்தூர் தொகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version