2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இதுவரை இல்லாத வகையில் பெரும் வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, தனித்துப் போட்டியிட்ட தவெக 1 கோடி வாக்குகளைக் கடந்து ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. அரசியல் கட்சிகள் பல தசாப்தங்களாகக் கட்டமைத்த வாக்கு வங்கிகளை வெறும் இரண்டே ஆண்டுகளில் தவெக தகர்த்தெறிந்துள்ளதை இது காட்டுகிறது.

4.8 கோடி வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலில், தவெக ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் சுமார் 20% – 25% வாக்கு சதவீதத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல தொகுதிகளில் தவெக-வின் வாக்கு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த ஒரு கோடி வாக்குகள் என்பது தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாகவும் உருவெடுத்துள்ளது.


Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version