மத​வாத சக்​தி​கள் தமி​ழ​கத்​தில் காலூன்றி விடக்​கூ​டாது என்ற கொள்​கை​யின் அடிப்​படை​யில் திமுக கூட்​ட​ணி​யில் தொடர்​கி​றோம் என்று மதி​முக எம்​.பி. துரை வைகோ தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது:

மத்​திய அரசு போதிய நிதியை வழங்​காத போதி​லும், தமிழக அரசு அளித்த வாக்​குறு​தி​களில் 80 சதவீதத்தை நிறை​வேற்றி உள்​ளது. சில வாக்​குறு​தி​கள் நிதிச் சுமை​யால் நிறை​வேற்​றப்​ப​டா​மல் உள்​ளன. திமுகவை எதிர்க்​கும் வல்​லமை இருப்​ப​தாக நடிகர் விஜய் மற்​றும் எதிர்க்​கட்​சி​யினர் கூறு​வது, அவர்​களின் உரிமை.

மக்​கள் சமத்​து​வ​மாக வாழ வேண்​டும் என்​ப​தற்​காக ஜன.2-ம் தேதி திருச்​சி​யில் இருந்து மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ​வின் நடைபயணம் தொடங்க உள்​ளது.

மதவாத சக்​தி​கள் தமி​ழ​கத்​தில் காலூன்​றி​விடக்​கூ​டாது என்ற கொள்​கை​யின் அடிப்​படை​யில் கூட்​ட​ணி​யில் தொடர்​கி​றோம். இதுகுறித்​து​தான் கட்​சி​யின் உயர்​நிலைக் குழு​வில் விவா​திக்​கப்​பட்​டது. திமுக கூட்​ட​ணி​யில் மதி​முக 10 இடங்​களை கேட்​ட​தாக வரும் தகவல் தவறானது. ஆட்​சி​யில் பங்கு கேட்​டு, அதனால் குழப்​பத்தை ஏற்​படுத்த விரும்​ப​வில்​லை. கூட்​ட​ணிக்​குள் பிளவை எதிர்​பார்க்​கும் கட்​சிகளுக்கு இடம் கொடுக்க நாங்​கள் தயா​ராக இல்​லை. திமுக கூட்​ட​ணிக்​குள் ஒரு​போதும் விரிசல் வரா​து.

கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் கட்சி விருப்​பத்​தின் அடிப்​படை​யில் தனி சின்​னத்​தில் மதி​முக போட்​டி​யிட்​டது. வரும் தேர்​தலில் எந்த சின்​னத்​தில் போட்​டி​யிடு​வது என்​பது குறித்து கூட்​ட​ணி​யின் தலைமை முடி​வெடுக்​கும். வரும் தேர்​தலில் நான்கு முனை போட்டி காரண​மாக திமுக கூட்​ட​ணிக்கு எதி​ரான வாக்​கு​கள் பிளவுபடும் என்​ப​தால், திமுக கூட்​ட​ணி​யின் வெற்றி எளி​தாகும்.

கடந்த தேர்​தலில் பாஜக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்று இருந்த கட்​சி​களின் தனி​நபர் செல்​வாக்​கின் அடிப்​படை​யில் பாஜக கூட்​டணி 18 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. அது பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை​யால்​ கிடைத்​த வாக்​கு​கள்​ அல்​ல என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version