Close Menu
    What's Hot

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»கூட்டணி கட்சி தொகுதிகளைக் கேட்கும் முஸ்லிம் லீக்! – எப்படி சமாளிக்கப் போகிறது திமுக?
    தேர்தல் 2026

    கூட்டணி கட்சி தொகுதிகளைக் கேட்கும் முஸ்லிம் லீக்! – எப்படி சமாளிக்கப் போகிறது திமுக?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmkss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    ஆனால், மூன்றிலுமே அந்தக் கட்சி தோற்றுப் போனது. அதனால் இம்முறை சிறுபான்மையின வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டுப்பெற அக்கட்சி வியூகம் வகுத்து வருகிறது.

    அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட சில தொகுதிகளை திமுக கூட்டணியில் கேட்டுப் பெறுவது என அந்த மாவட்டங்களில் நடைபெற்ற ஐயுஎம்எல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அக்கட்சியின் மேலிட நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், ‘‘கடந்த முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது எங்களுக்கு முதலில் பாபநாசம், ஆம்பூர், கடையநல்லூர் ஆகிய தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டன. பின்னர், அது மாற்றப்பட்டு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கினர்.

    இருந்த போதும், கூட்டணி தர்மம் கருதி வேண்டாவெறுப்பாக அந்தத் தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இம்முறை விரும்பும் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். அதன்படி, வக்பு போர்டு முன்னாள் தலைவர் அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் அபுபக்கர் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வசதியாக திருச்சி கிழக்கு தொகுதியையும், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் போட்டியிட வசதியாக பாபநாசம் தொகுதியையும் கேட்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது’’ என்றனர்.

    இதில், கடந்த முறை திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜூம், பாபநாசம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இந்த இரண்டு தொகுதிகளையும் இம்முறை முஸ்லிம் லீக் கேட்பது, தோழமைக் கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தோழமைக் கட்சியினர் சமூக ஊடகங்களில் வார்த்தை யுத்தம் நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் நெரிசல் வழக்கு!. உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் “ஏதோ தவறு” உள்ளது!. உச்சநீதிமன்றம் அதிரடி!
    Next Article ஜிடிபி வளர்ச்சியில் கெத்து காட்டும் தமிழகம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    Editor TN Talks

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    தலித் முதல்வர் எட்டாக்கனியா? – திருமாவளவனின் வேதனையும் தமிழகத்தின் எதார்த்தமும்!

    May 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.