ஸ்டாட் run ஸ்டாப் drugs போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
சென்னை, காமராஜர் சாலை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் முன்னிட்டு நடைபெறும் “ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026″யை முதலமைச்சர் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார்.
சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘Start Run Stop Drugs’ என்ற பெயரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு விளையாட்டை சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாகக் கருதி செயல்பட்டு வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போதைப்பொருளில்லாத தமிழகம்’ என்ற உயரிய இலக்கை அடையும் வகையில் தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டு கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இது குறித்த விழிப்புணர்வு பாடலை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இந்த ஓட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்
